வணக்கம்,
நான் உங்கள் க.சிவா, நான் கடந்த 20 வருடங்களாக கணிணி கல்வி நிறுவனம் நடத்தி வருகிறேன். பல்வேறு வகையான மென்பொருள் பயிற்சிகளை எங்கள் பகுதி மக்களுக்கு வழங்கி வருகிறேன். என்னுடைய நேரடி கணிணி பயிற்சியில் பயின்று பயடைந்தவர்கள் ஏராளம், ராசிபுரத்தில் கணிணி கல்வி பயின்றவர்கள் பெரும்பாலோர் என்னிடம் பயின்றவர்கள் என்பதில் எனக்கு மிகந்த மகிழ்ச்சி. ஏன் சில கணிணி கல்வி நிறவனம் நடத்துபர்கள் கூட என்னிடத்தில் பயின்றவர்களும் என் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள் தான். சில தட்டச்சு நிறுவன உரிமையாளர்களும் என்னிடத்தில் சிஓஎ பயிற்சி அளிப்பதற்காக பயின்றவர்கள் என்பதை பெருமையுடன் சொல்லி கொள்ள முடியும். தற்பொழது மாறி வரும் சூழலில் என்னுடைய அனைத்து மென்பொருள் பயிற்சிகளையும் இணையதளத்தில் கொண்டு வந்து அனைத்து மக்களும் மிக குறைந்த கட்டணத்தில் பயிற்சிகளை பயில முனைந்துள்ளேன். அதன் தொடக்கமாகதான் தமிழ் டைப்பிங் கோர்ஸ் மற்றும் இங்கிலீஷ் டைப்பிங் கோர்ஸ் பதிவேற்றி உள்ளேன். பல மாணவர்கள் இதை பயின்று பயனைடந்து உள்ளார்கள். மேலும் சிஓஎ சான்றிதழ் பெறுவதற்கு தேவையான எக்ஸெசல் பயிற்சியையும் வழங்கி உள்ளேன். புத்தக வடிவில் பெற விரும்புகிறவர்களுக்கு அமேசான் கின்டில் புத்தகமாக பிரசுரித்து உள்ளேன்.
தற்பொழது கம்ப்யூட்டர் அடிப்படைகள் தெரியாதவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய மைக்ரோஸாப்ட் வேர்ட் கோர்ஸ் வெளியிட்டுள்ளேன். இதில் நீங்கள் கம்ப்யூட்டர் அடிப்படைகளுடன் மைக்ரோஸாசாப்ட் வேர்ட் சாப்ட்வேர்வையும் கற்று கொள்வீர்கள். தினமும் 30 நிமிடங்கள் உங்கள் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ செலவிட்டால் போதுமானது. கம்ப்யூட்டர் பற்றிய அடிப்படை புரிதல்களோடு தாங்களே ஒரு டாக்குமெண்டை டைப் செய்து பிரிண்ட் எடுக்கும் அளவிற்கு தயாராகிவிடுவீர்கள்.
இன்றைய காலகாட்டத்தில் கம்ப்யூட்டர் பயன்படுத்தாத இடங்களே இல்லை என சொல்ல முடியும். தங்கள் அலுவக பணிகள் செய்ய, பள்ளி மற்றும் கல்லூரிகளில் ப்ரஜெக்ட் வேலைகள் செய்ய, உங்கள் ஊரிலே பள்ளிகளில், தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற இந்த பயிற்சி நிச்சயம் தேவை படும். இந்த பயிற்சி தெரியாமல் தங்கலால் கம்ப்யூட்டரை தனியாக கையால முடியாது. எனவே இந்த பயிற்சி கம்ப்யூட்டர் ஆப்ரேட் செய்ய விரும்புகிறவர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பயிற்சி ஆகும்.
இங்கு வகுத்து தந்திருக்கும் பாடத்திட்டங்கள் முதல் பாடத்தில் ஒரு அடிப்படை புரிதலும் இல்லாமல் இருந்தவர்கள் கடைசி பாடம் வரும் போது அனைத்து தலைப்புகள் பற்றி புரிதல் பெற்றவர் ஆவீர்கள் என்று உறுதியுடன் கூற முடியும். உடிமி போன்ற இணையதளத்தில் தான் முழுமையாக பாடம் சார்ந்த தொகுப்பை சரியாகவும், சான்றிதழ் உடனும், குறைந்த கட்டணத்தில் பெற முடியும். பள்ளி பயிலும் மாணவர்கள் நிச்சியம் முதலில் அறிந்து கொள்ள வேண்டிய பாடத்திட்டம் என்றால் மைக்ரோஸாப்ட் வேர்ட் என்று சொல்லலாம். அவர்கள் இப்பயிற்சியை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலை தேடுபவராக இருந்தால் கம்ப்யூட்டர் படித்து விட்டு வாருங்கள் என்று சொன்னால் முதலில் நீங்கள் படிக்க வேண்டிய பாடம் இதுதான் கம்ப்யூட்டர் அடிப்படைகள் பயில்வதுடன் வேர்ட் டாக்குமென்ட் பற்றியும் முழுமையாக பயிலுவீர்கள்.
அரசாங்க சான்றிதழான சிஓஏ சான்றிதழ் பெற விரும்புகிறவர்கள் நிச்சயம் இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் ஏனெனில் சிஓஎ பாடத்திட்டத்தில் வேர்ட்வும் வருகிறது. இதில் முழுமையான வேர்ட் கற்று தரப்பட்டுள்ளது. சில தட்டச்சு நிறுவனங்கள் இந்த பயிற்சியை அளிக்க 5000 முதல் 7000 வரை பெறுகிறார்கள். அந்த தட்டச்சு நிறுவனங்கள் நடத்துபவர்களுக்கு டைப்பிங் பற்றிய அனுபவம் உள்ளதே ஒழிய எங்களை போன்று கம்ப்யூட்டரில் உள்ளவர்கள் அல்ல. நாங்கள் 20 வருடங்களாக கம்ப்யூட்டர் படிப்பையே முதலானதாக எடுத்து சொல்லி தருவதால் இந்த பயிற்சியே உங்களுக்கு சிறந்த ஒன்றாக விளங்கும் என்பதில் ஐயமில்லை. அதுவும் மிக குறைந்த கட்டணத்தில் உங்கள் வீட்டில் இருந்தே படியே கற்று கொள்ள போகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களுக்கு இந்த பாடத்தில் சந்தேகங்கள் இருப்பின் நேரடியாக வாட்ஸ்ஆப் மூலம் தொடர்பு கொண்டால் உங்கள் சந்தேகங்களுக்கும் தெளிவு கொடுப்போம் என்பதை சொல்லி கொள்ள விரும்புகிறோம்.
பள்ளி மாணவர்கள் தற்பொழது உள்ள சூழலில் உங்கள் நேரத்தை பப்ஜி போன்ற விளையாட்டுகளிலும், இளைஞர்கள் சமூக வலைதளங்களிலும் பொழது போக்குவதை காட்டிலும் இது போன்ற கம்ப்யூட்டர் பயிற்சிகள் மேற்கொள்வதால் தங்கள் எதிர்காலத்தை வளமாக்கி கொள்ளலாம். இப்பயிற்சியை முழுமையாக பயின்றால் நீங்களே ஆன்லைனில் புத்தகங்கள் வெளியிட்டு சம்பாதிக்கலாம்.
இறுதியாக கம்ப்யூட்டர் அடிப்படைகள் கற்க விரும்பும் எவருக்கும் உகந்த பயிற்சி இது, தாய்மொழியில் பயின்றால் மட்டுமே விரைவில் அந்த துறையில் நுண்ணறிவு பெறுகிறார்கள் என்று ஓர் ஆய்வு கூறுகிறது. அதனாலலேயே முதலில் நம் தாய் மொழி தமிழில் வகுத்து தந்துள்ளேன். வெளிநாட்டு மாணவர்களுக்கு விரைவில் ஆங்கில வழியிலும் வெளியிடப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
இப்பயிற்சியை மேற்கொண்டு வாழ்வில் மேன்மேலும் உயர என் வாழ்த்துக்களை முன் கூட்டியே தெரிவித்து கொள்கிறேன்
நன்றி
உங்கள்
க. சிவா
யுடுமி ஆசிரியர்