வணக்கம்,
நான் உங்கள் க.சிவா, கடந்த 20 வருடங்களாக கணிணி கல்வி நிறுவனம் நடத்தி வருகிறேன். தற்பொழது எனது பயிற்சிகளை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து வருகிறேன். யுடிமி யில் கல்வி கற்பவர்களுக்கும் கற்பிப்பவர்களுக்கும் சிறந்து தளமாக விளங்குகிறது. இந்த பாவர்பாயின்ட் முன்பு தமிழ் டைப் ரைட்டிங், இங்கிலீஷ் டைப் ரைட்டிங், கம்ப்யூட்டர் அடிப்படைகளோடு கூடிய மைக்ரோசாப்ட் வேர்ட் மற்றும் எக்ஸல் பயிற்சிகள் பதிவேற்றம் செய்து உள்ளேன். ஏற்கனவே பல மாணவர்கள் இப்பயிற்சி மேற்கொண்டு பயடைந்து உள்ளனர். உங்களுக்கும் இப்பயிற்சி தேவையெனில் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.
தற்பொழது மைக்ரோசாப்ட் பவர்பாயின்ட் இந்த பயிற்சியில் வழங்கி உள்ளேன், பவர்பாயிண்ட் மென்பொருள் சிறிய சாப்ட்வேராக இதற்கு முன்பு கருதபட்டு வந்தது. ஆனால் தற்பொழது இனணயதள பயன்பாடுகள் அதிக அளவு பயன்பாட்டுக்கு வந்த பிறகு பவர்பாயிண்ட் மென்பொருள் மிக முக்கிய மென்பொருளாக உருவெடுத்துள்ளது. யூடியூப்பில் விடியோக்கள் பதிவேற்றி பகுதி நேரமாக சாம்பாதிக்க விரும்புகிறவர்களுக்கும்,ஆன்லைனில் பாடங்கள் எடுக்க விரும்புகிறவர்களுக்கும் உகந்த மென்பொருளாக விளங்குகிறது.
பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் வகுப்புகள் ஆன்லைனில் வகுப்புகள் எடுக்க விரும்புகிறவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய மென்பொருள் பவர்பாயிண்ட் மென்பொருள். நீங்கள் ஆசிரியராக பணியாற்ற விரும்பினால் நிச்சியம் இந்த பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இதில் அனைத்து விதமான ஸ்லைடுகளை உருவாக்கும் பயிற்சிகளை பாடதிட்டமாக வகுத்து தந்துள்ளேன்.
சிஓஏ தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் எடுக்க விரும்புகளுக்கு இந்த பயிற்சி கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டிய ஒன்று. சிஓஏ தேர்வு பாடத்திட்டத்தில் பவர்பாயிண்டு மென்பொருளும் ஒன்றாக உள்ளது. இப்பயிற்சியை சில டைப்பிங் பயிற்சி நிறுவனங்கள் வழங்க 5000 முதல் 7000 வரை பெறுகின்றனர். ஆனால் அவர்கள் டைப்பிங் பயிற்சியில் இருக்கும் திறன் கம்ப்யுட்டர் பயிற்சி அளிப்பதில் இல்லை என்பதை நான் பல இடங்களில் கண் கூடாக பார்த்து இருக்கிறேன். மேலும் எங்களை போன்றோர் 20 வருடமாக கம்ப்யூட்டர் பயிற்சி அளிப்பதே முதன்மையாக கொண்டு திகழ்வதால் எங்களிடம் பயிலும் போது முழு அளவு திறனையும் இந்த பயிற்சியின் மூலம் பெறுவீர்கள் என்பதை ஆணி தரமாக சொல்ல முடியும். மேலும் என்னிடத்திலேயே சில டைப்பிங் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள் பயின்று தற்பொழது பயடைந்து வருகின்றனர் என்பதை பெருமையுடன் சொல்லி கொள்ள முடியும். எனவே தாங்கள் சிஓஏ தேர்வு எழுதி அரசாங்க பணிக்கு செல்ல விரும்புகிறவராக இருந்தால் நான் வகுத்து தந்துள்ள இப்பயிற்சியை உங்கள் இடத்திலேயே பயின்று பயடையுமாறு கேட்டு கொள்கிறேன்.
உங்கள் மகன், மகள் வீட்டில் நேரத்தை பப்ஜி மற்றும் ஆன்லைன் கேம்களில் நேரத்தை வீணடிப்பதாக உணர்ந்தால் அவர்களை இந்த பயிற்சி மேற்கொண்டு தங்கள் அறிவு திறனை வளர்த்து கொள்ள உதவுங்கள். ஒரு முறை இப்பயிற்சியில் சேர்ந்தால் போதுமானது வாழ்நாள் முழுவதும் இப்பயிற்சி பாடத்தை பயன்படுத்தி கொள்ளலாம், மேலும் இந்த பயிற்சியின் முடிவில் உடிமியால் சான்றிதழும் வழங்க படுகிறது. நீங்கள் இந்த பயிற்சியை உங்கள் போன், லேப்டாப் அல்லது டிவியில் கூட பார்த்து பயிலமுடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நீங்கள் உங்கள் வீட்டிலேயே சுயமாக ஆன்லைனில் யூடியூப், பேஸ்புக் போன்ற தளங்களில் சம்பாதிக்க விரும்பினால் இந்த பயிற்சியை தாராளமாக மேற்கொள்ளலாம். கேம்டிசியா எடிட்டிங் மென்பொருள் பற்றி பாடங்களும் இதில் வருகின்றன. அதை பவர்பாயின்ட் மென்பொருளில் எப்படி பயன்படுத்தலாம் என்பதையும் விவரித்து உள்ளோம்.
இப்பாடத்தில் எந்த சந்தேகங்கள் இருப்பினும் எனது வாட்ஸ்ஆப்பில் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்தி கொள்ளலாம் என்பதையும் கூறி கொள்ள விரும்புகிறேன்.
கம்ப்யுட்டர் அடிப்படைகளோடு கூடிய மைக்ரோசாப்ட் பவர்பாயிண்ட் மென்பொருள் பற்றி ஒரு முழுமையான பாடத்திட்டமாக வகுத்து தந்துள்ளேன். தாய் மொழியில் பயில்பவர்கள் அந்த துறையில் எளிதில் சிறந்தவராக விளங்குகின்றனர் என்று அறிவியல் கூற்று சொல்கிறது அதற்காகவே தமிழ் வழியில் தற்பொழது வழங்கி உள்ளேன். கூடிய விரையில் வெளிநாட்டு மக்களும் பயன்படும் வகையில் ஆங்கில வழியிலும் வெளியிடுவேன் என்பதை கூறி கொள்ள விரும்புகிறேன்.
இப்பயிற்சியில் சேர்ந்து வாழ்வில் வளம்பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
நன்றி
க.சிவா
யுடிமி ஆசிரியர்