இந்த பாடங்கள் உங்களை சிறந்த வலை வடிவமைப்பாளராக மாற்றும். இதுவரை நீங்கள் எந்தத் துறையை அடைய முயற்சிக்கிறீர்கள்! இந்த வகுப்பு அதை தீர்க்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிதாக ஆரம்பித்து முழுமையான வலை வடிவமைப்பாளராக மாற இந்த வகுப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
அதில் நீங்கள் வேர்ட்பிரஸ் மற்றும் HTML, CSS, MySQL, PHP பற்றி அறிந்து கொள்வீர்கள்.
இந்த பாடத்திட்டத்தில், ஒரு வலை உருவாக்குநராக நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை மற்றும் வலைத்தளங்கள் குறித்து விரிவாகப் பார்க்கப் போகிறோம்.
இந்த வகுப்பு தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
வேர்ட்பிரஸ் தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. அதைப்போன்றே எண்ண வகையில் ஹேக் செய்யப்பட்டும் வருகிறது. எனவே நமது வெப்சைட்டினை எவ்வாறு பாதுகாப்பாக தொடர்ந்து பணியாற்றச் செய்வது போன்ற முக்கியமான வீடியோக்கள் இதில் அடங்கும்.
நீங்கள் உங்கள் வெப்சைட்டினை எளிதாக பேக்அப் (Backup) செய்வது மற்றும் ரீஸ்டோர் (Restore) செய்வது உள்ளிட்டவையும் தொடர்ச்சியாக பதிவேற்றம் செய்யப்படும்.
இதில் குறிப்பாக ஒரு வலைதளத்தை நாம் Domain வாங்குவதில் தொடங்கி என்னென்ன செய்ய வேண்டும் என்பதை விரிவாக பார்க்க இருக்கிறோம்.
Hosting பற்றிய விரிவான தகவல்களை இந்த வகுப்புகளில் விரிவாக பார்க்கலாம்.
உங்களது வாடிக்கையாளர்களுக்கு எவ்வாறான வலைதளங்கள் தேவைப்படுகின்றன. அதனை எவ்வாறு நீங்கள் வடிவமைக்கப் போகிறீர்கள். அதற்குத் தேவையான Theme, Plugins மற்றும் இதர Setting களை இதில் பார்க்கலாம்.
தொடர்ச்சியாக நீங்கள் பல்வேறு வகையான வலைதளங்களை வடிவமைத்து அதில் பெறும் அனுபவங்களைக் கொண்டு மேலும் சில சிக்கலானவற்றை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.
மேலும் உங்களது சந்தேகங்கள் என்னிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். உங்கள் வலைதளத்திற்குத் தேவைகளை இங்கு நீங்கள் பெறலாம்.
டொமைன் என்றால் என்ன? (What is Domain)
ஹோஸ்டிங் என்றால் என்ன? (What is Hosting)
வலைதளம் என்றால் என்ன? (What is Website)
வேர்ட்பிரஸ் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான தகவல்கள்! (Importent Setting in WordPress Website)
போன்ற முக்கிய தலைப்புகளில் வீடியோக்கள் பொதிந்துள்ளன.
மேலும் அதிக தகவல்களைப் பெற இந்த வகுப்பில் நீங்கள் சேர்ந்து பயிற்சி பெற்று தெரிந்துகொள்ளலாம்.
அன்புடன்
வளவன்.