வணக்கம்,
நான் உங்கள் க.சிவா, நான் சிஜிஎஸ் இன்போடெக் என்கிற கணிணி கல்வி நிறுவனம் கடந்த 20 வருங்களாக நடத்தி வருகிறேன். இது வரையில் எனது ஊர் மக்கள் மட்டுமே என் பயிற்சிகளை பயின்று பயனடைந்து வந்தனர். தற்பொழது எனது பயிற்சிகளை ஆன்லைனில் கொண்டு வந்து உள்ளேன். அதில் முதலாவதாக டைப்பிங் பயிற்சிகள் பற்றிய பாடங்கள் வெளியிட்டுள்ளேன். அதை பயிற்சியில் சேர்ந்து பலர் பயடைந்துள்ளனர். தற்பொழது உங்களுக்காக இந்த மைக்ரோசாப்ட் எக்ஸெல் பயிற்சியும் தயாரித்துவழங்கி உள்ளேன் என்பதை பெருமையுடன் கூறி கொள்ள விரும்புகிறேன்.
இப்பாடத்திட்டத்தில் உங்களுக்கு கம்ப்யூட்டர் அடிப்படைகள் பயிற்றுவிப்பதோடு மைரோசாப்ட் எக்ஸெசல்லில் உள்ள அனைத்தும் ஆப்ஷனுகளும் கற்று கொள்வீர்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வீட்டில் தங்கள் நேரத்தை பப்ஜி மற்றும் சமுக வலைதளங்களில் வீணடிப்பதை விட தினமும் 30 நிமிடங்கள் எங்கள் ஆன்லைன் பயிற்சியை மிக குறைவான கட்டணத்தில் முழுமையான எக்ஸெலை கம்ப்யூட்டர் அடிப்படைகளோடு கற்றுக் கொள்ளுங்கள். படிப்பிலும் மற்றும் வாழ்விலும் முன்னேறுங்கள்.
இன்றைய காலக்கட்டத்தில் அலுவலக பணிகளுக்கு கம்ப்யூட்டர் பயன்படுத்துவது இன்றியமையாதது ஆகிவிட்டது. அதில் கணக்கு வழக்குகளை வணிக நிறுவனங்கள் பயன்படுத்த 90 சதவிதம் மைக்ரோசாப்ட் எக்ஸெல் பயன்படுத்த படுகிறது.
மைக்ரோசாப்ட் எக்ஸெல் பயன்படுத்தாத வணிக நிறுவனங்களே இல்லை எனலாம். அந்த அளவிற்கு இதன் பயன்பாடு எளிதாகவும் விரைவாகவும் கணக்கீடுகள் செய்ய பயன்படுகிறது. கணக்கீடுகள் விரைவாக எந்ததெந்த முறைகளில் செய்யலாம் என்பதும் இந்த என்னுடைய பாடத்திட்டத்தில் அறியலாம்
நீங்கள் ஒரு டிகிரி முடித்தவராக இருந்தால் அலுவலக வேலைகள் தேடுபவராக இருந்தால் நிச்சயம் மைக்ரோசாப்ட் எக்ஸெல் தெரிந்திருந்தால் மட்டுமே இன்றைய கால கட்டத்திற்கு வேலை உறுதியாக கிடைக்கும் எனலாம். வேலை தேடுவோர்க்கு கேட்கபடும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த பாடத்திட்டம் வகுத்து தரப்பட்டுள்ளது
உங்கள் வணிக நிறுவனங்களின் கணக்கு வழக்குகளை பார்க்க மிக எளிய மென்பொருள்தான் இந்த மைக்ரோசாப்ட் எக்ஸெல் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். அதற்கான பயிற்சி இந்த பாடத்திட்டத்தில் உள்ளது.
அரசாங்க பணி தேடுவோர்க்கு சிஓஏ பயிற்சி மிக அவசியம். அந்த பயிற்சி சான்றிதழ் பெற்று இருந்தால் மட்டுமே அரசாங்க கணிணி துறை வேலை கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை. அந்த சான்றிதழ் பெற சிஓஏ பாடத்திட்டத்தில் மைக்ரோசாப்ட் எக்ஸெலும் ஒன்றாக உள்ளது. அந்த சிஓஏ தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெறும் வகையில் இந்த பாடத்திட்டத்தை வகுத்து தந்துள்ளேன். சிஓஏ பாடதிட்டத்தை தட்டச்சு பள்ளிகள் படிக்க 5000 முதல் 8000 வரை கல்வி கட்டணமாக பெறுகிறார்கள். அந்த பயிற்சியை வழங்கும் பெரும்பாலோர் தட்டச்சு பாடதிட்டத்தில் வல்லவராக இருந்தாலும் எங்களை போன்று கணிணி கல்வி வழங்குவதில் மிக குறைந்த அளவே அனுபவம் பெற்றவராக இருக்கின்றனர். ஆனால் இந்த பயிற்சியில் என்னுடைய 20 வருட மைக்ரோசாப்ட் எக்ஸெல் அனுபவத்தை பாடத்திட்டமாக வகுத்து தந்துள்ளேன். இப்பயிற்சி சொல்லப்பட்டவைகளை பயின்று சிஓஏ பயிற்சியில் அதிக மதிப்பெண்கள் பெற வாழ்த்துகளை முன்கூட்டியே சொல்லி கொள்ள விரும்புகிறேன் மேலும் இந்த பயிற்சினை மிக குறைவான கட்டணத்தில் பயில வழங்கி உள்ளேன்.
இந்த பயிற்சில் மைக்ரோசாப்ட் எக்ஸெலில் அடிப்படை முதல் அட்வான்ஸ்டு கான்சப்ட் வரை பாடத்திட்டமாக வகுத்து தந்துள்ளேன். இப்பயிற்சியை பயின்று மேலும் வாழ்வில் முன்னேற என்னுடைய வாழ்த்துக்கள்
யுடுமியில் பயில்வது மாணவர்களுக்கும் சரி ஆசிரியர்களுக்கும் சரி மிகுந்த பயனை வழங்க கூடிய ஆன்லைன் ப்ளாட்பார்ம். இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி பயிற்சியின் முடிவில் யுடிமி வழங்கும் சான்றிதழ் பெற்று பயனைடய வேண்டுகிறோம்.
இப்பயிற்சி பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பரிதுரை செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்
தற்பொழது மைக்ரோசாப்ட் எக்ஸெல் பயிற்சி தமிழில் வழங்கி உள்ளேன். ஏனெனில் தாய்மொழி மூலம் கல்வி பயில்பவர்களே எளிதாகவும் விரைவாக அந்த துறையில் முன்னேற்றம் காண்கின்றனர் என ஓர் ஆய்வு கூறுகிறது. எனவே நமது தாய்மொழியில் பயின்று பயடையுமாறு கேட்டு கொள்கிறேன்.
மற்ற நாட்டு மக்களுக்காக கூடிய விரைவில் ஆங்கிலமொழியிலும் பிரசுரிக்கப்படும் என்பதையும் தெரிவித்துகொள்கிறேன்.
நன்றி
க. சிவா