வணக்கம்,
நான் உங்கள் ஜி. சிவா, கடந்த 20 வருடங்களாக கணிணி பயிற்சி நிறுவனம் நடத்தி வருகிறேன். அங்கு பல்வேறு மென்பொருள்களை பயிற்றுவித்து மாணவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டி வருகிறேன். தற்பொழது இணையதளத்தில் ஆன்லைன் பயிற்சிகளை வழங்கி வருகிறேன். இதில் ஏற்கனவே தமிழ் டைப்பிங், இங்கிலீஷ் டைப்பிங், வேர்ட், எக்ஸ்சல், பவர்பாயிண்ட் மற்றும் டேலி ஈஆர்பி மற்றும் சி புரோகிராமிங் போன்ற ஆன்லைன் பயிற்சிகள் இணைதளத்தில் வெளியிடப்பட்டு உங்கள் நல்ஆதரவை பெற்று வருகிறேன்.
தற்பொழது மேலும் ஓர் மைல்கல்லாக எனது ஆன்லைன் பயிற்சியில் சி++ ப்ரோகிராமிங் பயிற்சியை வெளியிட்டுள்ளேன். இந்த பயிற்சியை மென்பொருள் நிறுவனத்திற்கு செல்லவிரும்புவோர் அனைவரும் பயிலலாம். கோடிங் எழத விரும்பிகிறவர்கள் முதலில் கற்று கொள்ள வேண்டிய மென்பொருள் என்றால் சி மற்றும் சி++ ப்ரோகிராமிங் என்றே சொல்லலாம்.
நீங்கள் +2 வில் கம்ப்யூட்டர் குருப் எடுக்க இருக்கும் மாணவர்களாக இருந்தாலும் சரி, கல்லூரியில் கம்ப்யூட்டர் படிப்பை மேற்கொள்ளும் மாணவராக இருந்தாலும் சரி, ப்ராகிராமிங் துறைக்கு செல்ல விரும்பும் நபராக இருப்பின் இந்த சி மற்றும் சி++ ப்ராகிராமிங் உங்களுக்கு உதவும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்களது பாடத்திட்டத்தில் சி மற்றும் சி++ ப்ரோகிராமிங் இருந்தால் இந்த பயிற்சியை மேற்கொண்டு கம்ப்யூட்டர் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற வாழ்த்துகிறோம்.
தனியார் பயிற்சி நிறுவனத்தில் இப்பயிற்சியை மேற்கொள்ள ரூ 5000 முதல் ரூ.8000 வரை செலுத்தி படிக்க வேண்டி இருக்கும் ஆனால் இந்த சி++ ப்ரோகிமிங் பயிற்சியை இங்கு மிக குறைந்த கட்டணத்தில் படிக்க இருக்கீர்கள் என்பதை பெருமையுடன் சொல்லி கொள்ள விரும்புகிறோம்.
இந்த பயிற்சியை மேற்கொள்ள ப்ரோகிராமிங் அறிவே தேவையில்லை. இந்த பயிற்சியில் உங்களுக்கு ப்ரோகிமிங் அடிப்படைகள் முதல் அட்வான்ஸ்டு கான்சப்ட் வரை கற்றுத்தரபடுகிறது. ப்ராகிராம்கள் அனைத்தும் நேரடியாக சொல்லிதரும் உணர்வை நீங்கள் நிச்சயம் பெறுவீர்கள். நீங்கள் 8 ஆம் வகுப்பு மாணவராக இருந்தால் கூட இந்த சி++ ப்ரோகிராமிங் கற்று பயன் பெறலாம். சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கே சி++ ப்ரோகிராமிங் வருகிறது. அவர்களுக்கு நாங்கள் வகுத்து தந்துள்ள இந்த பாடத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்பதை நிச்சியம் கூறமுடியும்.
கணிணி கல்வி துறையில் எனது 20 வருட அனுபவத்தின் காரணமாக உங்களுக்கு ஏற்ற வகையில் பாடத்திட்டமாக வகுத்து எளிமை படுத்தி தந்துள்ளேன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு முறை இந்த பயிற்சியில் சேர வேண்டியது மட்டுமே. வாழ்நாள் முழுவதும் இந்த பாடங்கள் உங்களுக்கு சொந்தமானவை. எப்பொழதும் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ள இயலும் என்பதையும் நினைவுட்ட விரும்புகிறோம்.
இப்பயிற்சியில் சேர்ந்து வாழ்வில் வளம்பெற எனது வாழ்த்துக்கள்.
இப்படிக்கு
க.சிவா
யுடிமி ஆசிரியர்,