ஃபேஷன் உலகில் எது ட்ரெண்டிங்கில் உள்ளது என்பதை அறியவும், அவற்றைப் பின்பற்றவும் நாம் ஆர்வமாக உள்ளோம். நம்மில் சிலருக்கு ஃபேஷன் என்பது ஒரு கலை மற்றும் வாழ்க்கை முறை. ஃபேஷன் மீதான இந்த அன்பை ஒரு தொழிலில் இணைப்பதை விட சிறந்தது வேறு என்னவாக இருக்க முடியும்? படைப்பு உலகில் இருந்து கற்று கொள்வதற்கு நிறைய உள்ளது. ஒரு ஆடையை உருவாக்கும் முன் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய பல விஷயங்கள் உள்ளன.
இந்தப் பாடத்திட்டத்தில், டிசைனிங் மென்பொருளான அடோப் இல்லஸ்ட்ரேட்டரின் அடிப்படைகளைக் கற்றுக்கொள்வோம், மேலும் அடிப்படை ஃபேஷன் ஓவியங்களை உருவாக்க அதைப் பயன்படுத்துவோம். மென்பொருள் இடைமுகம் மற்றும் இதிலுள்ள அனைத்து கருவிகளையும் நாம் புரிந்துகொள்வோம். இதைப் பயன்படுத்தி பல டிசைன்களை நாம் உருவாக்கலாம்.
இந்தப் பாடத்திட்டத்தில், ஸ்வாட்ச்கள், கிரேடியண்ட், நிரப்பு வண்ணம், ஸ்ட்ரோக், கோப்பு மேலாண்மை, மென்பொருளில் உள்ள பல்வேறு கருவிகள், இம்போர்ட்டிங் & எஸ்ப்போர்ட்டிங், கோப்பு வகைகள் மற்றும் ட்ரேஸிங் பற்றி நீங்கள் அறிந்து கொள்வீர்கள். மேலும், கையால் வரையப்பட்ட படத்தைக் டிஜிட்டல் வடிவமைப்பாக மாற்ற கற்றுக் கொள்வீர்கள்.
உடல் தோரணைகள், பல்வேறு வண்ணத் திட்டங்கள், ஆடைகளின் வெவ்வேறு பாகங்கள், அணிகலன்கள் மற்றும் சிகை அலங்காரங்களின் ஓவியங்கள் அனைத்தும் ஒரு ஃபேஷன் விளக்கப்படத்தின் உள்ளார்ந்த பகுதியாகும். மிகச்சிறிய விவரங்களுக்கும் கவனம் செலுத்தினால்தான் ஒரு சிறந்த பேஷன் டிசைனை உருவாக்க முடியும். எனவே கவனம் செலுத்தி மென்பொருளின் ஒவ்வொரு கருவியின் நோக்கத்தையும் புரிந்து கொள்ளுங்கள். இதை நீங்கள் அறிந்தவுடன், அடோப் இல்லஸ்ட்ரேட்டரைப் பயன்படுத்தி அற்புதமான வடிவமைப்புகளை உருவாக்க முடியும்.
டிசைனிங் மென்பொருளைத் தேடும் ஃபேஷன் டிசைனர்கள், லோகோ, சின்னங்கள், சுவரொட்டிகள், சிறுபடங்கள், டிஜிட்டல் கலைப்படைப்புகளை வடிவமைக்க விரும்புபவர்கள் மற்றும் தொடக்க நிலை டிசைனிங் ஆர்வலர்கள் ஆகியோருக்கு இந்த வகுப்பு பயனுள்ளதாக இருக்கும்.
இது தொடக்கநிலையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட அடிப்படைப் பாடமாகும் என்பதை நினைவில் கொள்ளவும். மென்பொருளைப் பற்றிய சில அடிப்படை அறிவு உங்களுக்கு ஏற்கனவே இருந்தால், இதைத் தவிர்க்கலாம்.
கற்றல் பயணம் தொடங்கட்டும்!